நடிகர் ரஜினியை திடீரென சந்தித்துள்ள இலங்கை தூதர்- இப்படியொரு விஷயம் நடக்கப்போகிறதா?
நடிகர் ரஜினிகாந்த்
இந்திய சினிமாவிற்கே முக்கிய நடிகராக இருக்கிறார் ரஜினிகாந்த். தமிழில் எடுக்கப்படும் அவரது படங்களை இந்திய சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து இடையில் படங்கள் நடிக்காமல் இருந்த ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு எந்த ஒரு சத்தமும் இல்லாமல் நடந்து வருகிறது.

இலங்கை தூதர்
இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன் நேற்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் இலங்கை வர வேண்டும் என்றும் அங்குள்ள ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களை பார்வையிட வேண்டும் என்றும் மேலும் இலங்கையில் உள்ள பாரம்பரிய கலாச்சார மத சின்னங்களை அவர் பார்வையிட இலங்கைக்கு வர வேண்டும் என்று இலங்கை தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
தற்போது உள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக ரஜினி உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் அடுத்தடுத்து முடியப்போகும் 4 சூப்பர் நிகழ்ச்சிகள்- ரசிகர்கள் ஷாக்
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri