சரிகமப நிகழ்ச்சியால் இலங்கை பெண் அசானிக்கு கிடைத்த பரிசு- அமைச்சர் உறுதி, என்ன தெரியுமா?
சரிகமப நிகழ்ச்சி
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப லிட்டில் சேம்ஸ்.
2 சீசன்களை கடந்து இப்போது 3வது சீசன் நடந்து வருகிறது, அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
28 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இப்போது 5 பேர் வெளியேறியுள்ளனர், இப்போது 23 பேர் போட்டி போட்டு வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் இலங்கை பெண் அசானி கனகராஜ் கலந்துகொண்டிருக்கிறார், இவரின் குடும்பம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் தான் இருந்துள்ளனர்.
இவர் வீடு கூட இல்லாமல இருக்கும் அவர் பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வருவதற்கே மற்றவர்கள் உதவியால் டிக்கெட் வாங்கி வந்திருக்கிறார்.
அமைச்சர் கொடுத்த உறுதி
இந்த நிலையில்தான் அசானிக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் உறுதியளித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதை தெரிவித்துள்ளார்.
ரூ. 15 லட்சம் செலவில் ஒரு வீட்டை நிர்மாணித்து கொடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ஷாஜகான் பட புகழ் நடிகை ரிச்சா பல்லோத்தை நியாபகம் இருக்கா?- குடும்ப போட்டோ