இலங்கை பாராளுமன்றத்தில் பேசப்பட்ட அசானி- ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்
சரிகமப 3
சரிகமப நிகழ்ச்சியின் 3வது சீசன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பெரியவர்களுக்கான சீசன் முடிவுக்கு வந்தது, அதே வேகத்தில் சிறியவர்களுக்கான நிகழ்ச்சியும் தொடங்கிவிட்டது.
இந்த 3வது சீசனில் இலங்கையை சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா என இருவர் கலந்துகொண்டனர்.
அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொரு சகோதரர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.
வானொலி மூலம் பாடல்கள் கேட்டு பாட பழகிய அசானி இன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடி வருகிறார்.
இலங்கை பாராளுமன்றம்
இப்போது சரிகமப நிகழ்ச்சியில் பாட தேர்வாகியுள்ள அசானி பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.
அதனை ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் போட்டுக் காட்டியதோடு அசானியை போட்டியாளராகவும் தேர்வு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ மக்களிடம் வைரலாகி வருகிறது.