கோப்ரா படத்தில் நடிக்க கே.ஜி.எப் பட நடிகை வாங்கிய சம்பளம்.. தமிழ் சினிமா முன்னணி நடிகைகளை விட அதிகம்
கோப்ரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முதல் முறையாக விக்ரம் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் கூட இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரம் பல வேடங்களில் மிரட்டலாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவருக்கு தமிழில் இதுவே முதல் படமாகும்.
ஸ்ரீநிதி ஷெட்டி வாங்கிய சம்பளம்
இதற்கு முன் கன்னடத்தில் உருவாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்த கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், கோப்ரா திரைப்படம் நடிக்க நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகைகளை விட அதிகமான சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
