வட்டி விலக்கு கேட்ட நடிகர் சூர்யா, நீதிபதியின் அதிரடி உத்தரவு !
நடிகர் சூர்யா 2007-08, 2008-09 ஆகிய ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து, கடந்த 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “வருமானவரித்துறையின் மேல்முறையீட்டு முடிவு 3 ஆண்டுகளுக்கு பிறகு தெரிவிக்கப்பட்டதால் தனக்கு வருமான வரிக்கான வட்டி செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும்” என சூர்யா தரப்பில் கேட்கப்பட்டது.
இந்நிலையில் வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை என வருமான வரித்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நடிகர் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இதேபோல் சமீபத்தில் விஜய் மற்றும் தனுஷின் சொகுசு கார் இறக்குமதி வரி விலக்கு கேட்ட வழக்கு விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.