கணவரின் முதலாம் ஆண்டு நினைவுநாள்... சோகமான பதிவு போட்ட சீரியல் நடிகை
நடிகை ஸ்ருதி
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்த ஒரு தொடர் நாதஸ்வரம்.
இந்த தொடர் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. அடுத்து இவர் நடித்த வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெரிதாக்கினார்.
கடந்த 2022ம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரான அரவிந்தை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அரவிந்த் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
திருமணமான ஒரு வருடத்திலேயே அவரது கணவர் இறந்தது அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.
நடிகையின் பதிவு
தற்போது ஷண்முகப்பிரியா கணவர் மறைவிற்கு பிறகு =சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி தொடரில் நாயகியின் தோழியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவை ஒட்டு ஸ்ருதி தனது இன்ஸ்டாவில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய உயிர் உள்ளவரை தான் அரவிந்தின் ஸ்ருதி என்றும் அதேபோல அரவிந்த் தன்னுடையவர் என்றும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.