தனது மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகை ஸ்ருதி ஷண்முக ப்ரியா... அதற்கு காரணம்?
ஸ்ருதி ஷண்முக ப்ரியா
சன் தொலைக்காட்சியில் 15 வருடத்திற்கு முன்பு செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் நாதஸ்வரம்.
திருமுருகனுக்கு தங்கைகளில் ஒருவராக ராகிணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அவருக்கு தொடர் நல்ல ரீச் கொடுத்தது. அந்த சீரியலை தொடர்ந்து கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார்.
பின் அடுத்தடுத்து சீரியல் நடித்து வந்தவர் தனது நீண்டநாள் காதலர் அரவிந்த் சேகர் என்பவரை 2024ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
பாடி பில்டரான அவர் திடீரென உயிரிழந்தார், அதுவும் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே இறந்துவிட்டார். இது அனைவருக்கும் ஷாக்காக இருந்தது.

மறுமணம்
தனது கணவர் இறந்தாலும் அவர் என்னுடன் தான் இருக்கிறார், அவருடன் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன் என ஸ்ருதி இப்போதும் தனது கணவர் குறித்து அழகான விஷயங்களை கூறிய வண்ணம் இருக்கிறார்.
நடிகை ஸ்ருதி அண்மையில் ஒரு பேட்டியில், என்னை 2வது திருமணம் செய்ய சொல்லி பெற்றோர்களும், மாமியாரும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த சமூக கட்டமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை, தனியாக வாழ்வதும் 2வது திருமணம் செய்துகொண்டு வாழ்வதும் அவரவர் திறமைதான்.
வரும் காலங்களில் எனக்கு வேறு ஒரு பையனை பிடித்தால் கூட அவரை எனக்கு அனுப்பி வைத்தவர் எனது பாதுகாவலர் தேவதை, என் கணவர் அருணாக தான் இருப்பார் என கூறியுள்ளார்.
