'Hats off அஜித்': ஒரு விஷயத்திற்காக புகழ்ந்து தள்ளிய ராஜமௌலி
நடிகர் அஜித்தின் வலிமை பட ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் தற்போது காபி வித் டிடி நிகழ்ச்சியில் ராஜமௌலி அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
அஜித் பற்றி ராஜமௌலி கூறியதாவது..
"ராமோஜி பிலிம் சிட்டியில் ஒரு முறை அஜித்தை சந்தித்தேன். அங்கு ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கும். அங்கு நிறைய பேர் இல்லை. அஜித் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் அவர் எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார்."
"என்னை அழைத்து சென்று அவரது டேபிளில் அமர வைத்தார். அதன் பின் என் மனைவி வர அவரையும் சென்று அழைத்து வந்து அமர வைத்தார். 'I'm Ajth' என அவரே என் மனைவியிடம் அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது அவரிடம் அதிகம் பேசினோம்."
"தற்போது அவர் செய்த விஷயம் எனக்கு பெரிதாக inspire செய்தது. கோடிகணக்கான ரசிகர்கள் தல தல என பைத்தியமாக இருக்கிறார்கள். 'தல' என்பதை நீக்கிவிட்டு அஜித் குமார் அல்லது ஏகே என்று மட்டும் கூப்பிட சொன்ன அவருக்கு ஹாட்ஸ் ஆஃப்" என ராஜமௌலி கூறி இருக்கிறார்.
#AK ?
— Vijay Television (@vijaytelevision) December 30, 2021
RRR Special - வரும் சனிக்கிழமை மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RRRSpecial #NewYearSpecial #AjithKumar #NewYear2022 pic.twitter.com/9s8qpvDNXI
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri