பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரான மகேஷ் பாபு-எஸ்.எஸ். ராஜமௌலி பட பெயர் வெளியானது
எஸ்.எஸ்.ராஜமௌலி
பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமா மக்களையும் கவனிக்க வைத்த ராஜமௌலி RRR படத்தின் மூலம் ஆஸ்கர் மேடைவரை சென்று விருது வென்று வந்தார்.

அடுத்த படம்
அப்படத்தை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி, மகேஷ் பாபுவுடன் இணைந்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கி வந்தார்.

இதில் பிரியங்கா சோப்ரா, ப்ருத்விராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு க்ளோப் ட்ரோட்டர் என அழைக்கப்பட்டு வருகிறது. இன்று பிரம்மாண்டமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு படத்தின் பெயர், டீஸர் வெளியாகவுள்ளது.
தற்போது படத்திற்கு வாரணாசி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.