மகேஷ் பாபு படத்தை தொடர்ந்து மாஸ் நடிகருடன் இணையும் எஸ்.எஸ்.ராஜமௌலி... யாருடன் தெரியுமா?
எஸ்.எஸ்.ராஜமௌலி
ஸ்ரீதுர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, ப்ருத்விராஜை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.
2 பாகங்களாக உருவாக உள்ளது, படப்பிடிப்புகளும் நிறைய இடங்களில் நடக்கிறது. காசியின் வரலாற்றை பேசும் தொன்மையான கதையாக உருவாகிவரும் இந்த திரைப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட் போட்டும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஒடிசாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது மகேஷ் பாபு இடம்பெறும் வீடியோ ஒன்று வெளியாக படக்குழு செம ஷாக் ஆனார்கள், அதன்பின் படப்பிடிப்பில் கடுமையான கட்டுப்பாடு விதித்தனர்.
அடுத்த படம்
மகேஷ் பாபுவுடன், ராஜமௌலி இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் இயக்குனர் அடுத்து இணையப்போகும் நடிகர் குறித்த தகவல் வந்துவிட்டது.
அதாவது மகேஷ் பாபுவை தொடர்ந்து ராஜமௌலி அல்லு அர்ஜுனுடன் இணையப்போவதாகவும் ஆரம்பகட்ட நிலையில் பேச்சு வார்த்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.எஸ்.ராஜமௌலி ஒரு பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்க, அல்லு அர்ஜுனும் அட்லீயுடன் இணைந்துள்ள பட வேலைகளில் உள்ளார்.