360 ஏக்கர் சொத்து.. ஆனால் திடீரென ஏழை ஆன ராஜமௌலியின் குடும்பம்! என்ன நடந்தது?
ராஜமௌலி
இயக்குனர் ராஜமௌலி இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவில் பாப்புலர் ஆன இயக்குனர் ஆகிவிட்டார். அவர் இயக்கிய RRR படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன நிலையில் அதில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது.
ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் சினிமாவில் கதாசிரியராக இருந்து வருகிறார். பாகுபலி, RRR உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியது அவர் தான்.

பணக்கார குடும்பம்
ராஜமௌலியின் குடும்பம் ஆரம்பத்தில் பணக்கார குடும்பமாக தான் இருந்திருக்கிறது. 360 ஏக்கர் சொத்து இருந்ததாம். ஆனால் ராஜமௌலி சுமார் 10 வயது இருக்கும்போது மொத்த சொத்தும் விற்றுவிட்டார்களாம். அதன் பின் மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்து ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்டில் வாடகைக்கு தங்கி இருக்கிறார்கள்.
13 பேர் வீட்டில் இருந்தாலும், ராஜமௌலியின் அண்ணன் மட்டும் தான் சம்பாதித்தாராம். அதை வைத்து வாடகை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்க்க வேண்டிய நிலை.
22 வயது வரை ராஜமௌலியும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாராம். எதாவது செய் என அப்பா தொடர்ந்து சொன்னதால் தான் ராஜமௌலி வாழ்க்கையை சீரியசாக எடுத்துக்கொண்டு பணியாற்ற தொடங்கினாராம்.

2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri