இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு- முழு விவரம்
எஸ்.எஸ்.ராஜமௌலி
இந்திய சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களின் லிஸ்டில் டாப்பில் இருப்பது எஸ்.எஸ். ராஜமௌலி.
இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார், அது அனைத்துமே பெரிய ஹிட் லிஸ்டில் அமைந்த படங்கள் தான்.
2001ம் ஆண்டு ஜுனியர் என்டிஆரை வைத்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த ராஜமௌலி அடுத்து அவரை வைத்தே சிம்மத்ரி என்ற படம் இயக்கினார்.
அடுத்து சை, சத்ரபதி, விக்ரமர்குடு, யமடோங்கா, மகதீரா என அடுத்தடுத்து மாஸ் படங்கள் கொடுத்தார்.
ஈ, பாகுபலி, RRR படங்கள் மூலம் இந்திய சினிமா கொண்டாடும் இயக்குனராக வலம் வருகிறார்.
பாகுபலி, RRR படங்களின் பெரிய வெற்றிக்கு பிறகு ராஜமௌலி ஒரு படத்துக்கு தற்போது ரூ. 50 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு
இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் வரிசையில் இருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி சொத்து மதிப்பு ரூ. 158 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பல கோடி மதிப்பிலான பங்களாவை 2008ல் வாங்கியுள்ளார். 1.5 கோடி மதிப்பிலான பிஎம்டபுள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார்.