இந்திய சினிமாவின் பெருமை... வாரணாசி படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
வாரணாசி
இயக்குநர் ராஜமௌலி உலகப்புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவராகியிருக்கிறார். இவருடைய இயக்கத்தில் படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் வாரணாசி. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பட்ஜெட்
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக ரூ. 25 கோடி செலவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படமாக உருவாகி வரும் வாரணாசியின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தை ரூ. 1,200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகிய இருவரும் சம்பளம் வாங்கவில்லையாம். படத்தின் லாபத்தில் இருந்து பங்கு பெற்றுக்கொள்வார்கள் என்கின்றனர்.