பொன்னியின் செல்வன் எடுக்க விரும்பிய ராஜமௌலி! ஆனால்..
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படம் பற்றி தான் தற்போது ஒட்டுமொத்தமாக சினிமா ரசிகர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் பாகுபலியா பொன்னியின் செல்வனா என்கிற மோதலும் தெலுங்கு vs தமிழ் சண்டையாக மாறி கொண்டிருக்கிறது.
பாகுபலி ரேஞ்சுக்கு PS 1 இல்லை என தெலுங்கு ரசிகர்களும், பாகுபலியே பொன்னியின் செல்வன் நாவலின் காபி தான் என தமிழ் ரசிகர்களும் கூறி சண்டை போட்டு வருகிறார்கள்.

ராஜமௌலியின் ஆசை
ராஜமௌலி தான் முதலில் பொன்னியின் செல்வன் எடுக்க ஆசைப்பட்டாராம், அது பற்றி அவரே ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். "பொன்னியின் செல்வன் நாவலை ஆங்கிலத்தில் தான் படித்தேன், அதை படமாக எடுக்கலாம் என முதலில் நினைத்தேன், ஆனால் பிறகு வெப் சீரிஸ் எடுக்க விரும்பினேன். ஆனால் அதற்குள் மணி சார் அறிவித்துவிட்டார்" என தெரிவித்து இருக்கிறார்.
பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த பேட்டி தற்போது மீண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் நெப்போலியன் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளரா!