ஜெய் பீம் படத்தை புகழ்ந்து தள்ளிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.. பாராட்டு மழையில் திரைப்படம்

suriya jai bhim CM stalin
By Kathick Nov 01, 2021 11:00 AM GMT
Report

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படம் இருளர் சமூகத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் Lijomol Jose, மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் என பலரும் நடித்துள்ளனர். நேரடியாக ஓடிடி-யில் இன்று இரவு வெளியாகவுள்ள இப்படம் குறித்து தற்போது சிறந்த விமர்சனங்கள் வர துவங்கிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

இதில் சுருக்கமாக " பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு! நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் " என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் " வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் " என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இருளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் மாணவர்களின் கல்விகாக 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US