நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின்
நடிகர் ஸ்டாலின் முத்து தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசனில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்திலும் ஸ்டாலின் முத்து நடிக்க வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி.
இந்நிலையில் ஸ்டாலின் முத்து ஒரு விழாவில் மற்றொரு நடிகை உடன் எடுத்த போட்டோவை தவறாக சித்தரித்து சிலர் கிசுகிசு பரப்பி இருக்கிறார்களாம்.
"தம்பதியான எங்களுக்கு இன்று திருமண நாள்.. வாழ்த்துங்கள்" என சொல்லி ஸ்டாலின் மற்றும் அந்த நடிகை இருக்கும் போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்களாம். அதற்கு பல ஆயிரம் லைக்குகள் கமெண்டுகள் வந்திருக்கிறதாம்.
அதை பற்றி பலரும் அவருக்கு போன் செய்து கேட்க, அந்த நடிகையும் ஒருகட்டத்தில் போன் செய்து இதுபற்றி காட்டமாக பேசி இருக்கிறார். அதனால் தற்போது சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறார் ஸ்டாலின்.
உண்மையான மனனவி
இந்நிலையில் ஸ்டாலின் முத்து தனது உண்மையான மனைவி மற்றும் மகன்களின் போட்டோவை வெளியிட்டு அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
அவரது குடும்ப புகைப்படங்கள் இதோ.





பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
