நான்கு நாட்களில் வசூல் வேட்டையாடிய கவினின் ஸ்டார்.. எவ்வளவு தெரியுமா
ஸ்டார்
வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஸ்டார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லால், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சாதாரண மனிதனின் அசாதாரணமான கனவு பற்றிய இப்படத்தை அழகாக எடுத்துக்காட்டி இருந்தார் இயக்குனர் இளன். முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் கவினின் ஸ்டார் திரைப்படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அதன்படி, இப்படம் வெளிவந்து நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை கவின் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

You May Like This Video
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை முறையைக் கைவிடுக... விமான நிலைய நிர்வாகிகள் கோரிக்கை News Lankasri