பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நிராகரித்த டாப் நட்சத்திரங்கள் ! இவர்கள் எல்லமா?
பொன்னியின் செல்வனை நிராகரித்த நடிகர்கள்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான அப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் முன்பு சில நடிகர்களை வைத்து உருவாக்கவிருந்து கைவிடப்பட்டது அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் தற்போது தயாராகியுள்ள இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது. அந்த வகையில் இப்படத்தில் நடிக்கவிருந்த நடிகர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், ஆனால் இப்படம் தொடங்க தாமதமானதால் தேதி பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தை நிராகரித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் தேதி பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகியுள்ளனர். மேலும் நடிகை அனுஷ்காவை அணுகியபோது அவர் இப்படத்தின் வாய்ப்பை நிராகரித்தாக சொல்லப்படுகிறது.

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
