அட்டகாசமாக தொடங்கிய ரசிகர்களின் பேவரெட் Start Music ஷோ 4வது சீசன்- முதல் நிகழ்ச்சியிலேயே இவர்களா?
Start Music ஷோ
பிரியங்கா தேஷ்பாண்டே விஜய்யில் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், எல்லா நிகழ்ச்சியிலும் தனது 100% உழைப்பை தான் போட்டுள்ளார்.
அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிரபலமாக தனியாகவும் புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அப்படி அவர் நடத்திய ஒரு நிகழ்ச்சி தான் Start Music, கடந்த வருடம் அதாவது 3வது சீசன் மட்டும் மாகாபா நடத்தினார், காரணம் பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் Start Music ஷோவின் 4வது சீசன் வரப்போகிறது என்று கலாட்டாவான ஒரு புரொமோ வந்தது.
முதல் ஷோ
இந்த நிலையில் தான் Start Music 4வது சீசனில் முதல் ஷோவில் கலந்துகொண்ட பிரபலங்களின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் வேறுயாரும் இல்லை பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் தான் முதலில் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது நிகழ்ச்சியின் புரொமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது?