ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த VJ பிரியங்காவின் ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 6.. ப்ரோமோ வீடியோ
ஸ்டார்ட் ம்யூசிக்
விஜய் தொலைக்காட்சியில் அனைவராலும் ரசிக்கப்படும் நிகழ்ச்சிகள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் ஸ்டார்ட் ம்யூசிக். VJ பிரியங்கா தொகுத்து வழங்க 2019ம் ஆண்டு இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் துவங்கியது.
சிரிப்பு பஞ்சமில்லாமல் மிகவும் கலகலப்பாக இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லுவார் பிரியங்கா. முதல் சீசன் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து ஐந்து சீசன்கள் ஒளிபரப்பானது.
சீசன் 6
சீசன் 5 கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், சீசன் 6 எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். அதன்படி ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 6 விரைவில் துவங்குகிறது என கடந்த வாரம் ப்ரோமோ வெளியானது.
அதை தொடர்ந்து தற்போது ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 6ன் ஒளிபரப்பு எப்போது என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. வருகிற ஜூன் 15ம் தேதி முதல் ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதோ அதற்கான ப்ரோமோ வீடியோ..

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
