நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்.. சர்ச்சைக்கு நடுவில் பரபரப்பு
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ திரையிடப்பட்ட தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த பெண்ணின் மகன் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்ப்பட்டு இருப்பதாகவும் சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில் அன்று மாலையே அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இந்த சம்பவம் பற்றி தெலுங்கானா சட்டமன்றத்தில் பேசிய முதலைச்சர் ரேவந்த் ரெட்டி ன் நடிகர் அல்லு அர்ஜுன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். 'பெண் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார் என போலீசார் அல்லு அர்ஜுனிடம் சொன்ன பிறகும் அவர் அங்கிருந்து போகாமல் காரில் ஏறி கைகாட்டி கொண்டிருந்தார். அவர் எப்படிப்பட்டவராக இருப்பார்' என முதலமைச்சர் கூறி இருக்கிறார்.
அல்லு அர்ஜுனுக்கு கைகால் போய்விட்டதா, கிட்னி போய்விட்டதா. அவரை எதற்கு எல்லா நடிகர்களும் வீட்டிற்கு சென்று நலம் விசாரிக்கிறார்கள். உயிரிழந்த பெண் பற்றி எந்த சினிமா துறையினரும் கவலைப்படவில்லையே எனவும் அவர் பேசி இருந்தார்.
அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்
தனது பெயரை கெடுக்க சதி நடக்கிறது என சொல்லி அல்லு அர்ஜுன் தற்போது இது பற்றி பேட்டி அளித்து இருக்கிறார்.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தற்போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் தான் கல்வீசி இருப்பதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Law and Order in Telangana Takes a Severe Hit
— India Brains (@indiabrains) December 22, 2024
Attack on #AlluArjun's Residence by Congress Leaders pic.twitter.com/VHinjuWTe8