இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மானசா- ராஜா ராணி சீரியல் குழுவினர் எடுத்த அதிரடி முடிவு
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு சீரியல் ராஜா ராணி. இதில் நாயகன்-நாயகியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருக்கும் காதல் ஏற்பட நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளார். இருவரும் ஒரு யூடியூப் பக்கம் திறந்து அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோவை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
அப்படி தான் அண்மையில் தனது மனைவி ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற சூப்பர் செய்தியை வெளியிட்டார். ஆல்யா மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றதை கூட வீடியோவாக அண்மையில் வெளியிட்டார்கள்.
இப்போது அவர் 4 மாதமாம், எனவே அவர் சீரியலில் இருந்து வெளியேறப்போகிறார் என்ற செய்தி பரவியது. ஆனால் உண்மை என்னவென்றால் ராஜா ராணி 2 சீரியல் குழுவினர் அவரை நீக்க வேண்டாம் என்றும் அவரது காட்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் பேசி வைத்துள்ளார்களாம்.
சீரியலிலும் ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக காட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.