தளபதி விஜய் - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி.. கதை ரெடியா?

By Kathick Jun 13, 2022 02:00 PM GMT
Report

விஜய் - வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யும், இயக்குனர் வெற்றி மாறனும் எப்போது ஒன்றாக இணைந்து பணிபுரிவார்கள் என்று ரசிகர்கள் பலரும், ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

விஜய்யுடன் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன், அவர் அழைத்தால் நான் சென்றுவிடுவேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். மேலும், இருவரின் கமிட்மென்ட் அனைத்து முடிந்து விரைவில் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி.. கதை ரெடியா? | Story Is Ready For Vijay Vetrimaaran Movie

கதை ரெடியா?

இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்துவிட்டாராம் இயக்குனர் வெற்றிமாறன். விஜய்க்காக வெற்றிமாறன் புதிய கதை ஒன்றை தயார் செய்துள்ளதாக வெளிவந்துள்ள புதிய தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. இதன்பின் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US