"எஸ்.டி.ஆர் 48".. சிம்புவுக்கு ஜோடியாகப்போவது யார்? லிஸ்டில் இத்தனை நடிகைகளின் பெயரா
எஸ்.டி.ஆர் 48
சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் எஸ்.டி.ஆர் 48. இப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்திற்காக சிம்பு தாய்லாந்திற்கு சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்து தற்காப்பு கலைகளைக் கற்று கொண்டுள்ளார்.
மேலும் தன்னுடைய கதாபாத்திரத்தை மேம்படுத்த அவர் தற்போது லண்டன் சென்றுள்ளார். சில வாரங்கள் லண்டனில் தான் இருப்பார் என தகவல் வந்துள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
இயக்குனர் தேசிங் பெரியசாமி தற்போது படத்திற்கு லொகேஷன் தேடும் வேலையில் இருக்கிறார் என்றும், இன்னும் சில வாரங்களில் படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் லொகேஷன் அனைத்தும் உறுதி செய்யப்படும் என தெரியவந்துள்ளது.
கதாநாயகி பட்டியலில் தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ், ப்ரியா பவானி சங்கர் மற்றும் அனு இமானுவேல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்