பாடையில் படுத்து நடித்தால் உடனே செய்ய வேண்டிய பரிகாரம்- லட்சுமி அம்மாவிற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு செய்த விஷயம், புகைப்படத்துடன் இதோ
பொதுவாக யாராவது இறந்தால் படமோ, சீரியலோ அவர்களது உடம்பை வீட்டில் வைத்து அழுவது அதற்கு மேல் சுடுகாட்டில் எரிப்பது போல் காட்டி முடித்துவிடுவார்கள்.
ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா அவர்களின் இறப்பை சீரியல் குழு அப்படி காட்டவில்லை. நிஜமாக இறந்தவர்களுக்கு என்னென்ன செய்வார்களோ அதை அப்படியே செய்வது போல் காட்சிகள் வைத்தார்கள்.
அவர்கள் செய்த சம்பிரதாயங்கள் எல்லாம் பார்த்து மக்களே அழுதுவிட்டார்கள் என்றே கூறலாம்.
சினிமாவில் பாடையில் எல்லாம் படுத்து நடித்தால் உடனே அதற்காக பரிகாரம் எல்லாம் செய்வார்களாம், சில சம்பிரதாயம் இருக்கிறதாம்.
அது என்னவென்றால், பொதுவாக பிரபலங்கள் இறந்தது போன்ற காட்சியில் நடித்தால், நடித்து முடித்த பிறகு உடனடியாக சிரித்த முகத்துடன் அந்த காட்சிகளுக்கு எதிரில் இருக்க வேண்டுமாம். இதுபோல செய்வது ஒரு பரிகாரமாக திரையுலகினர் கருதி வருகிறார்களாம்.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஷீலா பாடையில் படுப்பது போல் நடித்துள்ளார். இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் காட்சி முடிந்தவுடன் நடித்தவருக்கு பூசணிக்காயாலும் எலுமிச்சம்பழத்தினாலும் மற்றும் தேங்காயாலும் கற்பூரம் கொளுத்தி திருஷ்டி சுற்றி முடித்த பிறகுதான் வீட்டிற்கு அனுப்புவார்களாம்.
நடிகை ஷீலா அவர்களுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் எல்லா விஷயங்களையும் சரியாக செய்துள்ளனர்.