தெருவை காணவில்லை.. வடிவேலு பாணியில் பிக் பாஸ் ஜி.பி.முத்து அளித்த புகார்
விஜய் டிவி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜி.பி முத்து. அவர் youtubeல் பிரபலமாகி அதன் பின் பிக் பாஸுக்கு வந்தவர். ஆனால் அதில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்தார், அதன்பின் இருக்க முடியாது என சொல்லி வெளியில் சென்றுவிட்டார்.
அதன் பின் சில படங்களில் வாய்ப்பு வந்தது. அதன் பிறகு தற்போது எந்த பெரிய வாய்ப்புகளும் இல்லாத நிலையில் மீண்டும் youtube வீடியோ போடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தெருவை காணவில்லை..
இந்நிலையில் ஜிபி முத்து தற்போது தனது வீடு இருக்கும் தெருவை காணவில்லை என தூத்துக்குடி கலெக்டரிடம் புகார் கூறி இருக்கிறார்.
உடன்குடி பெருமாள்புரத்தில் இருந்த கீழதெரு என்ற தெருவை தான் காணவில்லை என அவர் கூறி இருக்கிறார். மேலும் அங்கே இருந்த கோவில் இடத்தை சில கள்ளபத்திரம் வைத்து மோசடியாக விற்பனை செய்து இருக்கின்றனர் எனவும் புகார் கூறி இருக்கிறார்.
வடிவேலு கிணத்தை காணவில்லை என சொன்னது போல ஜிபி முத்து அளித்திருக்கும் புகார் வைரலாகி இருக்கிறது.