சூப்பர் ஸ்டார் ரஜினியை இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்திருக்கிறீர்களா? மிரட்டலான லுக் புகைப்படம் இதோ!
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில் தேர்தலுக்கு பின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற தகவல் உலாவந்தது.
இதற்கிடையில் ஓய்வில் இருக்கும் ரஜினிக்கு தற்போது மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவது போல தெரிகிறது. சென்னையில் அவரின் ரசிகர்கள் தமிழ்நாட்டை காக்க தலைவர் ரஜினி ஆட்சிக்கு வரவேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரஜினி திட்டவட்டமாக அரசியலுக்கு வரமுடியாததை அறிவித்துவிட்ட நிலையில் மறுபடியும் அவர் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றால் சந்தேகம் தான்.
இதற்கிடையில் ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் எட்டிவிட்டன. இதனை முன்னிட்டு அவர் ரஜினியின் மிரட்டலான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
2 years ago this day gave the magical moments of Lifetime to all of us in the team...??
— karthik subbaraj (@karthiksubbaraj) January 10, 2021
நன்றி தலைவா ?
Thanks to audience for all the love to #Petta ?#2YearsOfPetta @sunpictures @DOP_Tirru @anirudhofficial @sureshsrajan @vivekharshan @kunal_rajan @tuneyjohn @ParruuG pic.twitter.com/EDeni01UFd