கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து.. ஒருவர் மரணம்! அதிர்ச்சி தகவல்
சர்தார் 2
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. பிரமாண்டமாக துவங்கிய இந்த படப்பிடிப்பில் கார்த்தி வயதான கெட்டப்பில் கலந்துகொண்ட வீடியோ கூட வெளிவந்தது.
மரணம்
இந்த நிலையில், நடைபெற்று வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் மரணமடைந்துள்ளார்.
20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சண்டை கலைஞர் ஏழுமலைக்கு மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
