பைக்கில் இருந்து விழுந்த பிறகு அஜித் செய்த ஒரு விஷயம்- வியந்த படக்குழு
தமிழ் சினிமாவில் சில படங்களே இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் வினோத்.
இவர் அஜித்தை வைத்து ஹிந்தி பட ரீமேக்கான பிங்க் என்ற படத்தை இயக்கினார், அப்படம் மூலம் அவரை பிடித்துபோக அடுத்த படத்திலும் வினோத்துடனே பணியாற்றுகிறார் அஜித்.
பட பூஜையின் போதே படத்திற்கு பெயர் வலிமை என அறிவித்துவிட்டனர். ஆனால் அடுத்தகட்டமாக எந்த ஒரு அப்டேட்டும் வரவிவ்லை, இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்தார்கள்.
ஆனால் இப்போது அஜித் ரசிகர்கள் இருக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. காரணம் நேற்று படத்தின் ஒரு சூப்பர் காட்சியின் மேக்கிங் வீடியோ வந்தது, அதில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுவதும் பின் உடனே எழுந்து மறுபடியும் செம பைக் காட்சியில் நடித்துள்ளார்.
இந்த காட்சி படப்பிடிப்பின் போது கீழே விழுந்த அவர் தன்னை பற்றி கவலைப்படாமல் பைக் என்ன ஆனது பாருங்கள், நாளை இதே பைக்கில் படப்பிடிப்பு உள்ளதே என வருத்தப்பட்டாராம்.
பின் அதிக பாதிப்பு பைக்கில் காணப்பட அந்த பைக் கம்பெனிக்கு போட்டு இதே பைக்கை இந்தியாவில் யார் வைத்துள்ளார் என கேட்டு அந்த நபரிடம் இருந்து பைக்கை பெற்று அடுத்த நாள் ஷுட்டிங்கை முடித்தாராம்.
இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் அஜித்தை பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.