ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் அதிரடி கைது- அதிர்ச்சியில் திரையுலகம்
கடந்த சில நாட்களுக்கு முன் இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருந்தார் கனல் கண்ணன்.
அது பெரிய பிரச்சனையாக தலைமறைவாக இருந்தார் கனல் கண்ணன்.
தற்போது புதுச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார்.
இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கனல் கண்ணனை கைது செய்ய போரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சனையால் தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் தற்போது கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் நடிக்க வந்த நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ்- எந்த சீரியல், டிவி தெரியுமா?