Substance Movie Review : சாப்பிடும் போது மட்டும் தயவு செய்து இந்த படத்தை பார்த்திராதீங்க

Report

Substance Movie Review

ஹாலிவுட்டில் பல உலக சினிமாக்கள் வருகிறது. அதெல்லாம் எல்லாரையும் சென்று அடைகிறதா என்றால் கேள்விக்குறி தான். அந்த வகையில் இந்த மாதிரி படங்களில் முன்னணி நடிகர், நடிகை என நடிப்பது கூடுதல் கவனம் பெறுகிறது. 

அப்படி இயக்குனர் Coralie Fargeat இயக்கத்தில் Demi Moore, Margaret Qualley நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் Substance. சரி இந்த படம் எப்படி பார்ப்போம்.

Substance Movie Review : சாப்பிடும் போது மட்டும் தயவு செய்து இந்த படத்தை பார்த்திராதீங்க | Substance Movie Review

படத்தின் நாயகி டெமி மூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொடிக்கட்டி பறக்கிறார். ஊர் முழுவதும் இவர் படம் போட்ட விளம்பரங்கள் தான் உள்ளது. ஒரு கட்டத்தில் இவருக்கு வயது ஆகிறது.

அந்த நிலையில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் இனி இந்த கிழவி வேண்டாம் மிக அழகான இளமையான பெண்ணை தேர்ந்தெடுக்கலாம் என்று சொல்ல, இதை டெமி பாத்ரூமில் இருக்கும் போது கேட்கிறார்.

Substance Movie Review : சாப்பிடும் போது மட்டும் தயவு செய்து இந்த படத்தை பார்த்திராதீங்க | Substance Movie Review

அமரன் படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

அமரன் படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

அந்த மன உளைச்சல் உடன் காரில் ஒரு ஆக்ஸிடன் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அந்த மருத்துவமனையில் ஒரு இளம் மருத்துவர் சப்ஸ்டன்ஸ் என்ற மருந்து உங்களை இளமையாக்கும் என்று அட்ரஸ் கொடுக்கிறார்.

மீண்டும் அந்த நிகழ்ச்சியில் நாம் கொடிக்கட்டி பறக்க வேண்டும் என டெமி அந்த மருந்தை வாங்கி ஊசி வழியாக போட்டுக்கொள்ள, அவர் உடலை கிழித்துக்கொண்டு டெமி-யின் இளமை உருவம் மார்கர்ட் வருகிறார்.

Substance Movie Review : சாப்பிடும் போது மட்டும் தயவு செய்து இந்த படத்தை பார்த்திராதீங்க | Substance Movie Review

7 நாட்கள் இளமையான மார்கர்ட், 7 நாட்கள் வயதான டெமி என்பது போல் அந்த மருந்து வேலை செய்ய, பிறகு என்ன மார்கர்ட் அதே தொலைக்காட்சி சென்று வேலையில் சேர்ந்து, மீண்டும் புகழ் அடைகிறார்.

அந்த மருந்து சரியாக 7 நாட்கள் வேலை செய்யும், 8 வது நாட்களும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்பி மருந்தை எடுத்துக்கொண்டால் அது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் ஆசை யாரை விட்டது மார்கர்ட் மீண்டும் 8வது நாளும் இளமையாக இருக்க மருந்து எடுக்க, அது டெமி உடலை மிகவும் வயதாக மாற்றுகிறது.

Substance Movie Review : சாப்பிடும் போது மட்டும் தயவு செய்து இந்த படத்தை பார்த்திராதீங்க | Substance Movie Review

இதனால் கோபமடைந்த டெமி ஒரு நாள் சிக்கன் சாப்பிட, அந்த சிக்கன் மார்கர்ட் உடலில் அப்படியே வந்து அவரை நிகழ்ச்சி போது தர்மசங்கடமாக்கிறது. இப்படி தான் ஒரே உயிராக இருந்தாலும் முதுமை, இளமை கதாபாத்திரங்களின் ஈகோ மோதல்களை மீதி படமாக எடுத்த விதத்தில் இயக்குனர் Coralie Fargeat மிரட்டி விட்டார்.

அதிலும் டெமி, மார்கர்ட் இருவரின் நடிப்பும் அசுரத்தனம், ஒரு கட்டத்திற்கு மேல், உடல் முழுவதும் பின் விளைவுகள் ஏற்பட்டு, ஐ விக்ரம் போல் ஆகும் காட்சிகள் எல்லாம் மிரட்டியுள்ளனர். மேக்கப் நிபுணர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்கர் தான்.

Substance Movie Review : சாப்பிடும் போது மட்டும் தயவு செய்து இந்த படத்தை பார்த்திராதீங்க | Substance Movie Review

அதோடு கிளைமேக்ஸ் காட்சியில் இளமையான மார்கர்ட் மிக வயதான தோற்றத்தில் உடல் முழுவதும் பின் விளைவுகளால் பாதிக்கப்பட்டு மேடையில் ரத்த களரியாக மாறும் இடம் தயவு செய்து சாப்பிடும் போது பார்க்காதீர்கள் என்பதே படம் பார்த்தவர்களின் கருத்தாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த உலகத்தில் ஒருவரின் ஆசை மற்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற பேராசை ஒருவரை எந்த அளவிற்கு கொண்டு செல்கிறது என்பதை இயக்குனர் 'தோலுரித்து' காட்டியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US