பிரியங்கா பற்றி அவர் முன்னாள் கணவரிடம் கேளுங்க.. என் தம்பி பையன் அவன்: பாடகி சுசித்ரா
விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோரது சண்டை பற்றி தான் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பிரியங்கா கொடுத்த தொல்லையால் தான் குக் வித் கோமாளி 5ல் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை அறிவித்து இருந்தார்.
அவருக்கு ஆதரவாக தற்போது பல பிரபலங்களும் பேச தொடங்கி இருக்கின்றனர்.
சுசித்ரா வீடியோ
பாடகி சுசித்ரா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருப்பதாவது..
"குக் வித் கோமாளி என்ன அவ்ளோ முக்கியமா. ஏன் மணிமேகலைக்கு ஆதரவாக வீடியோ போடுகிறேன். ஏனென்றால் தற்போது பிரச்சனை ஷோவை பற்றி இல்லை. "
"ஒரு Bullyயை பற்றி ஒருவர் இவ்வளவு கண்ணியமாக, அந்த toxic இடத்தில் இருந்து கிளம்பி வந்துவிட்டது மிக தைரியமான முடிவு. அங்கு என்னவெல்லாம் நடந்தது என விளக்கமாக வீடியோ போட்டிருக்காங்க மணிமேகலை. உங்கள் மீது அதிகம் மரியாதை வருகிறது."
" நீ என்னவெல்லாம் சந்தித்து இருப்பாய் என எனக்கு புரிகிறது. பிரியங்கா எப்பேர்பட்டவர் என்பதை அவரது முன்னாள் கணவரிடம் பேசி பாருங்க புரியும். "
"அவர் எனக்கு தம்பி மாதிரி. அவ்வளவு இனிமையானவன். ஆனால் அவனை நாசமா அடிச்சிடுச்சி அவனை. இதை எல்லாம் சொன்னால் நான் rumour சொல்கிறேன் என கூறுவார்கள்" என சுசித்ரா பேசி இருக்கிறார்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
