நாங்களும் இந்தியர் தான் சார்.. அஜய் தேவ்கனுக்கு சுதீப் பதிலடி!
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் "ஹிந்தி தான் தேசிய மொழி" என கூறிய ட்விட் தற்போது வைரல் ஆகி வருகிறது. தென்னிந்தியாவில் ஹிந்தி திணிப்பு மீது கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது அஜய் தேவ்கன் போட்ட ட்விட் வைரல் ஆனது.
கேஜிஎப் 2 வெற்றி பற்றி பேசிய கன்னட நடிகர் சுதீப் "ஹிந்தி தேசிய மொழி அல்ல" என கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக தான் இப்படி ஒரு ட்விட் போட்டிருக்கிறார்.
சுதீப் பதிலடி
இந்நிலையில் தற்போது சுதீப் அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். "நீங்கள் ஹிந்தியில் போட்ட ட்விட் எனக்கு புரிந்தது. நாங்கள் ஹிந்தியை மதித்து, காதலித்து, கற்றுக்கொண்டதால் தான். No offense சார்.. ஆனால் நான் இந்த ட்விட்டை கன்னடத்தில் போட்டிருந்தால் உங்கள் நிலை என்னவாக இருந்திருக்கும். நாங்களும் இந்தியர் தான் சார்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
And sir @ajaydevgn ,,
— Kichcha Sudeepa (@KicchaSudeep) April 27, 2022
I did understand the txt you sent in hindi. Tats only coz we all have respected,loved and learnt hindi.
No offense sir,,,but was wondering what'd the situation be if my response was typed in kannada.!!
Don't we too belong to India sir.
?
அஜய் தேவ்கன் விளக்கம்
சுதீப் பதில் கொடுத்த நிலையில் அஜய் தேவ்கன் அவரை 'நண்பர்' என குறிப்பிட்டு மீண்டும் பதிவிட்டு உள்ளார்.
"சினிமா துறை ஒன்றுதான் என நான் எப்போதும் நினைப்பேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியை எல்லோரும் மதிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம். Translationல் சில விஷயங்கள் மாறிவிட்டது" என கூறி உள்ளார்.
Hi @KicchaSudeep, You are a friend. thanks for clearing up the misunderstanding. I’ve always thought of the film industry as one. We respect all languages and we expect everyone to respect our language as well. Perhaps, something was lost in translation ?
— Ajay Devgn (@ajaydevgn) April 27, 2022
பீஸ்ட் 200 கோடி வசூல் உண்மையா...உடைத்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்