சுதா கொங்கரா - கேஜிஎப் தயாரிப்பாளர் கூட்டணி! ஹீரோ இந்த தமிழ் நடிகர் தான்
தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்துக்கொண்டிருக்கிறது கேஜிஎப் 2 படம். யாஷ் நடித்திருந்த இந்த படத்தின் வசூல் சாதனைகள் நாளுக்கு நாள் பாலிவுட் சினிமா துறையினரையே ஷாக் ஆக்கி வருகிறது. தென்னிந்திய படங்கள் இப்படி வசூல் சாதனைகள் படைப்பது பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தி இருக்கிறது.
சுதா கொங்கரா - Hombale பிலிம்ஸ் கூட்டணி
கேஜிஎப் தயாரிப்பாளர் Hombale பிலிம்ஸ் அடுத்து இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி சேர்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
இறுதிச் சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கிய அவருடன் Hombale பிலிம்ஸ் கூட்டணி சேர்ந்து இருப்பதால் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.
???? ???? ??????? ??????? ?? ?? ????, ??? ???? ?????.
— Hombale Films (@hombalefilms) April 21, 2022
To a new beginning with a riveting story @Sudha_Kongara, based on true events.@VKiragandur @hombalefilms @HombaleGroup pic.twitter.com/mFwiGOEZ0K
ஹீரோ யார்?
கேஜிஎப் போல இந்த படத்தையும் pan india படமாக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
மேலும் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.