படுகாயம் அடைந்து கையில் பெரிய கட்டுடன் இயக்குனர் சுதா கொங்கரா.. ஷாக்கிங் புகைப்படம்
சுதா கொங்கரா
இருதி சுற்று படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக முத்திரை பதித்தவர் சுதா கொங்கரா.
இதற்க்கு முன் அவர் சில படங்களை இயக்கியிருந்தாலும், இறுதி சுற்று தான் ரசிகர்கள் மத்தியில் அவரை கொண்டு சேர்த்தது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்த சுதா கொங்கரா, சூரரைப் போற்று எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார்.
இப்போது என்ன செய்கிறார்
இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தாலும், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு சொல்லில் அடங்காது.
மேலும் தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வரும் சுதா கொங்கரா விரைவில் ஒரு டாப் நடிகருடன் தமிழில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
படுகாயம்
இந்நிலையில், சுதா கொங்கராவிற்கு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கையில் பெரிய கட்டுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..
Super painful. Super annoying! On a break for a month 😒 #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf
— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023
பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த லாஸ்லியா.. யார் அந்த நடிகை தெரியுமா