தேசிய விருது வென்ற இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி விஜய்.. ஆனால்..
தளபதி விஜய்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார்.
இப்படத்தை முடித்தபின் லோகேஷ் கனகராஜுடன் இயக்கத்தில் தனது தளபதி 67 படத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன் தேசிய விருது வென்ற சினிமா நட்சத்திரங்களின் பட்டியல் வெளிவந்தது. இதில் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை சூரரை போற்று திரைப்படத்திற்காக சுதா கொங்கரா வென்றுள்ளார்.
சுதா கொங்கரா - விஜய் கூட்டணி
இந்நிலையில், தேசிய விருது வென்றுள்ள இயக்குனர் சுதா கொங்கராவிடம் சமீபத்தில் பேட்டி எடுத்துள்ளனர். இதில், விஜய்யுடன் இணையும் வாய்ப்பு இருக்கிறதா? அதை நாங்கள் எதிர்பார்க்கலாமா? என்று சுதா கொங்கராவிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த சுதா கொங்கரா, ' விஜய் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர். நான் கதை சொல்லி அது அவருக்கு பிடித்த கால்ஷீட் கிடைத்தால் கண்டிப்பாக இந்த கூட்டணி அமையும் ' என்று கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கூட்டணி அமையுமா என்று..