ரத்தன் டாடா கதையை படமாகும் சுதா கொங்கரா? ஹீரோ இந்த நடிகர் தான்
சுதா கொங்கரா
இறுதி சுற்று படம் மூலமாக இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் சுதா கொங்கரா. அதற்கடுத்து அவர் சூரரைப் போற்று படத்தை இயக்கி இருந்த நிலையில் அதற்கு பல தேசிய விருதுகள் கிடைத்தது.
தற்போது சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரிமேக்கை இயக்கி வருகிறார். இந்த கதை ஏர் டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்கி 1 ரூபாய்க்கு விமானத்தில் பறக்கலாம் என ஏழைகளையும் பறக்க வைத்த ஜி.ஆர்.கோபிநாத் என்பவரது வாழ்க்கை வரலாறு தான்.
டாடா வாழ்க்கை வரலாறு
இந்நிலையில் அடுத்து ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை சுதா கொங்கரா படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த படத்தில் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் தான் டாடா ரோலில் நடிக்க வாய்ப்பிருக்கிறது எனவும் தெரிகிறது. இந்த படம் 2023ல் தொடங்க சுதா கொங்கரா திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லவ் டுடே கதாநாயகி இவானாவா இது!.. மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க