கைவிரித்த சூர்யா.. சுதா கொங்கரா அடுத்து இந்த இளம் ஹீரோவை இயக்குகிறாரா
இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்கிய சூரரைப் போற்று படம் பெரிய ஹிட் ஆனது. அதற்கு தேசிய விருதும் கிடைத்தது.
அடுத்து அதே கூட்டணி புறநானூறு என்ற படத்திற்காக இணைவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படம் தற்போது தொடங்க வாய்ப்பில்லை, தாமதம் ஆகும் என சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் அந்த படம் கருத்து வேறுபாடு காரணமாக ட்ராப் ஆகிவிட்டது என சினிமா துறையில் பரபரப்பாக பேசப்பட்டது. சூர்யாவும் அடுத்தடுத்து பல படங்களை கமிட் செய்து வருகிறார்.
சுதா கொங்கரா அடுத்த படம்
இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்து நடிகர் துருவ் விக்ரம் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறாராம்.
சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகளை சுதா கொங்கரா தொடங்கிவிட்டதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
