அமீரை நக்கல் செய்தேனா.. ஞானவேல் ராஜா பேச்சுக்கு சுதா கொங்கரா கொடுத்த பதிலடி
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான மோதல் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
ஞானவேல்ராஜா அளித்த ஒரு பேட்டியில் சுதா கொங்கரா பற்றி ஒரு விஷயத்தை கூறி இருந்தார். "கார்த்தி, சுதா கொங்கரா ஆகியோர் மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய நேரத்தில் அமீரின் ராம் படம் ரிலீஸ் ஆனது."
"படம் வெளியாகி 25 நாட்கள் கழித்து நான், சுதா, கார்த்தி ஆகியோர் ஆல்பர்ட் தியேட்டரில் படம் பார்த்தோம். மேக்கிங் வரல என சுதா கமெண்ட் அடித்தார், கார்த்தி 50-50 படம் என கூறினார்" என ஞானவேல்ராஜா அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
சுதா கொங்கரா பதில்
இந்த விவகாரம் பற்றி சுதா கொங்கரா ஒரு ட்வீட் பதிவிட்டு இருக்கிறார். அமீர் மீது தனக்கு இருக்கும் மரியாதையை பற்றி கூறி இருக்கிறார்.
பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்...
நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன்.
நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி...
இவ்வாறு சுதா கொங்கரா பதிவிட்டு இருக்கிறார்.
பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து…
— Sudha Kongara (@Sudha_Kongara) November 26, 2023