ஹீரோயினை தொடர்ந்து ஹீரோவும் மாற்றம்.. மாரி சீரியல் புது ஹீரோ இவர்தான்
ஜீ தமிழ் சேனலின் முக்கிய சீரியல்களில் ஒன்று மாரி. திங்கள்-சனி வரை மாலை 6.00 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் ஹீரோயினாக நடித்து வந்த ஆஷிகா சமீபத்தில் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அஞ்சனா ஸ்ரீநிவாஸன் நடிக்கிறார். மாரி இறந்துவிட்ட நிலையில் அவர் வேறொரு பெண்ணின் உடலில் மீண்டும் வருவது போல கதை மாற்றப்பட்டுள்ளது.
கதையிலும் பல மாற்றங்களை செய்து இருக்கின்றனர். அதனால் பல புது ரோல்களும் கொண்டுவரப்பட இருக்கின்றன.
ஹீரோ மாற்றம்
மேலும் ஹீரோவும் தற்போது மாற்றப்பட்டு இருக்கிறார். ஹீரோவாக நடித்து வந்த ஆதர்ஷ் விலகி இருப்பதாகவும் அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் சுகேஷ் ஹீரோவாக நடிக்க போகிறாராம்.
அவர் தான் புது சூர்யா என்கிற தகவல் தற்போது வைரலாகி இருக்கிறது.
You May Like This Video