என்னது ஷாருக் கான் மகள் விவசாயியா? இத்தனை கோடிக்கு நிலம் வாங்கியிருக்கிறாரா

By Parthiban.A Jun 23, 2023 02:50 PM GMT
Report

ஷாருக் கான்

நடிகர் ஷாருக் கான் இந்திய அளவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது முந்தைய படமான பதான் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ஷாருக் கானின் மகள் சுஹானா கான் தற்போது The Archies என்ற படத்தின் மூலமாக நடிகையாக களமிறங்கி இருக்கிறார்.

என்னது ஷாருக் கான் மகள் விவசாயியா? இத்தனை கோடிக்கு நிலம் வாங்கியிருக்கிறாரா | Suhana Khan Buys Farmland In Alibaug

விவசாய நிலம்

23 வயதாகும் சுஹானா கான் தற்போது மகாராஷ்டிராவின் Alibaug தீவு டவுனில் 12.91 கோடி ரூபாய்க்கு விவசாய நிலம் வாங்கி இருக்கிறாராம்.

அந்த 1.5 ஏக்கர் நிலையில் 2218 சதுர அடிக்கு வீடும் இருக்கிறதாம். அதை வாங்குவதற்காக 77.46 லட்சம் ருபாய் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தி இருக்கிறார் அவர்.

அதற்கான பாத்திரத்தில் சுஹானா கான் தன்னை agriculturist என குறிப்பிட்டு இருக்கிறாராம். அதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். அங்கே விவசாய தொழில் செய்ய போகிறாரா அவர் என கிண்டல் செய்து வருகின்றனர். 

என்னது ஷாருக் கான் மகள் விவசாயியா? இத்தனை கோடிக்கு நிலம் வாங்கியிருக்கிறாரா | Suhana Khan Buys Farmland In Alibaug

நம்பர் 1 சேனல் எது? புள்ளிவிவரம் வெளியிட்டு மோதிக்கொண்ட சன் டிவி, விஜய் டிவி 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US