நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தோஷ செய்தி கூறியுள்ள நடிகை சுஜா வருணி... வீடியோ இதோ
சுஜா வருணி
தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என களமிறங்கிய நடிகைகளில் ஒருவர் தான் சுஜா வருணி.
முதல் படம் சரியாக கைக்கொடுக்காமல் போக நடனத்தின் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். பல படங்களில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகையாக வலம் வந்தார்.
அதன்பின் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருக்கு மக்களிடம் ஆதரவும், கொஞ்சம் வெறுப்பும் கிடைத்தது. கிடாரி, அப்புச்சி கிராமம், ஆண் தேவதை, இரவுக்கு ஆயிரம் கண்கள், சத்துரு போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

குட் நியூஸ்
இவர் சிவக்குமார் என்பவரை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் நடிகை சுஜா வருணி சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார்.
அதாவது நடிகை சுஜா வருணி மீண்டும் கர்ப்பமாக உள்ளாராம், அந்த விஷயத்தை குடும்பத்திடம் சொல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.