சீரியலில் நடிக்க தொடங்கிய பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி- எந்த தொடரில் வருகிறார் தெரியுமா?
பிக்பாஸ் விஜய்யில் ஆரம்பித்து ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. முதல் சீசன் தொடங்கும் போது பெரிய சர்ச்சைகளை சந்தித்தது.
வருடா வருடம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகப்பட்டு இப்போது 5வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகை சுஜா வருணி.
இவர் பிக்பாஸில் அப்பா இல்லை என்றும் அவரை மிஸ் செய்து மிகவும் கஷ்டப்பட்டோம் என்றும் அவர் கூறிய விஷயத்தை கேட்டு அனைவருமே வருத்தப்பட்டார்கள்.
பின் நிகழ்ச்சி முடிந்ததும் கமல்ஹாசன் அவர்கள் சுஜா வருணியை வீட்டிற்கு அழைத்து விருந்து எல்லாம் கொடுத்தார்.
இப்போது சுஜா வருணி தனது காதலரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையும் பெற்றுள்ளார்.
அவரைப் பற்றிய தற்போதைய தகவல் என்னவென்றால் அவர் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் தான் ஸ்பெஷல் ரோலில் நடிக்கிறாராம்.