ரவி மோகன் படங்களை தயாரித்து ரூ. 100 கோடி நஷ்டமடைந்த அவரது மாமியார்..

By Kathick May 18, 2025 07:30 AM GMT
Report

ரவி மோகன் - ஆர்த்தி

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து, பாடகி கெனிஷா என்பவருடன் பழகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இதுகுறித்து ரவி மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதில், " என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை தங்க முட்டையிடும் வாத்தாக பயன்படுத்தினர்" என கூறியிருந்தார்.

ரவி மோகன் படங்களை தயாரித்து ரூ. 100 கோடி நஷ்டமடைந்த அவரது மாமியார்.. | Sujatha Vijayakumar About Her Son N Law Ravi Mohan

உடல் எடை குறைத்தது எப்படி.. முதல் முறையாக ரகசியத்தை கூறிய நடிகை குஷ்பூ..

உடல் எடை குறைத்தது எப்படி.. முதல் முறையாக ரகசியத்தை கூறிய நடிகை குஷ்பூ..

இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரவி மோகனின் மாமியாரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கை

இதில், "கடந்த 2007ம் ஆண்டு 'வீராப்பு' எனும் படத்தை தயாரித்தேன், அப்படம் வெற்றியை கொடுத்தது. அதன்பின், தொலைக்காட்சியில் மட்டுமே கவனம் செலுத்தினேன். 2017ல் ரவி மோகன், பட தயாரிக்க வேண்டும் என்றார்.

அந்த ஆண்டு, ரவி மோகன் நடிக்க நான் தயாரித்த படம் 'அடங்கமறு'. அப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ரவி மோகன் வற்புறுத்தியதால் தொடர்ந்து படம் தயாரித்தேன்.

இதன்பின், அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று திரைப்படங்களை ரவி மோகனை வைத்து தயாரித்த. மூன்றும் தோல்வியடைந்தது. இதற்காக ரூ. 100 கோடி கடன் வாங்கினேன். அதில், 25 சதவீதத்தை ரவி மோகனுக்கு சம்பளமாக வழங்கினேன். இதற்காக அனைத்து ஆதாரமும் உள்ளது.

இப்போது ஏன் கடனுக்காக நான் அவரை பொறுப்பேற்க சொன்னதாக புகார் கூறுகிறார். அதில் உண்மை இல்லை. நான் அவரை நாயகன், மாப்பிள்ளையாக மட்டுமின்றி, என் மகனாகவே பார்த்தேன். பல கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மனா உளைச்சலை நான் மட்டுமே ஏற்றேன். படம் தோல்வியடைந்ததும், ஆட்டுத்த படம் நடித்து தருவதாக மட்டுமே ரவி மோகன் கூறினார்.

ரவி மோகன் படங்களை தயாரித்து ரூ. 100 கோடி நஷ்டமடைந்த அவரது மாமியார்.. | Sujatha Vijayakumar About Her Son N Law Ravi Mohan

ஆனால், கடனுக்கு பொறுப்பேற்கவில்லை. அவர் கூறியபடி, கடனுக்காக அவரை பொறுப்பெடுக்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் காட்டட்டும். இன்று வரை அவரை நான் நாயகனாக மட்டுமே பார்க்கிறோம், ரசிக்கிறோம்.

இது நீங்கள் எப்போதும் அலைக்கும், இந்த அம்மாவின் ஆசை. என் பேர குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, என் மகளும், மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும். என் மீது மாமியார் சித்திரவதை என்கிற குற்றசாட்டை சுமத்தாதீர்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US