பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதாவின் மகனா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே
விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவி TRP-யில் உச்சத்தை தொட இந்த சீரியலும் ஒரு முக்கிய காரணம்.
இந்த சீரியலில் தனம் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா. இவர் அஜித்தின் வாலி படம் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சின்னத்திரையில் சுஜிதா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. அப்படி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாபாத்திரம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.
நடிகை சுஜிதாவிற்கு, தனுஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த அழகிய தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை உண்டு. இந்நிலையில் சுஜிதா தனது மகனுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..