நிஜ வாழ்க்கையில் கவுண்டமணி இப்படிப்பட்டவரா?.. ரகசியத்தை உடைத்த சுகன்யா
சுகன்யா
90களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுகன்யா. சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த இவர் தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுகன்யா,பிரபல நடிகர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
அதில், "கவுண்டமணி சாய் சினிமாவில் பார்ப்பது போல் இல்லை. சினிமாவில் அவர் காமெடியாக பேசிக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் அவருக்கு சினிமாவை பற்றி அவ்வளவு அறிவு இருக்கிறது. நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார். ஆங்கில நடிகைகள் குறித்து பேசுவார்".
"என்னையும் சில படங்களை பார்க்குமாறு அறிவுரை கூறுவார். நடிப்பை தாண்டியும் கவுண்டமணிக்கு நிறைய திறமை இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் என்கிட்ட வாம்மா..வாம்மா'னு நல்லா பழகுவாரு. எனக்கு அவர் உடன் சேர்ந்து நடிக்க ரொம்ப பிடிக்கும்" என்று சுகன்யா கூறியுள்ளார்.
You may Like This Video

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
