புஷ்பா பட இயக்குனரின் படத்தில் தளபதி விஜய்யா ! வேற லெவல் காம்போ..
தெலுங்கில் தற்போது முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் சுகுமார், இவர் இயக்கத்தில் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் இவர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா, பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் வெளியான இப்படம் இந்தியளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
மேலும் புஷ்பா படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் மீண்டும் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 வெளியாகவுள்ளது. அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெரியளவில் உள்ளது.

இதனிடையே இயக்குனர் சுகுமார் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் ரங்கஸ்தலம் திரைப்படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் இயக்குனர் சுகுமாருடன் பணிபுரிய வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளாராம்.
மேலும் இதனை அவரிடம் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சொன்னதாக பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழில் படம் இயக்கினால் விஜய் சாருடன் நிச்சயம் பணிபுரிவேன் என தெரிவித்துள்ளார் சுகுமார்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri