சம்மர் 2022ல் வெளியாகவுள்ள பிரமாண்ட திரைப்படங்கள்.. அடேங்கப்பா, இது வேற லெவல்
பண்டிகை தினத்தன்று வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கும்.
அதே அளவிற்கு 'சம்மர்' கோடை விடுமுறையில் ஒவ்வொரு வருடமும் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும்.
அப்படி சம்மர் 2021ல், அதாவது இந்த வருடம், தனுஷின் கர்ணன் மற்றும் கார்த்தியின் சுல்தான், போன்ற படங்கள் திரையரங்கில் வெளியானது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு சம்மர் 2022ல் வெளியாகவுள்ள பிரமாண்ட திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2022 சம்மரில், தளபதி விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம், மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் பார்ட் 1, மற்றும் கே.ஜி.எப் சாப்டர் 2 வெளியாகும் என்று தெரிகிறது.
இதனால், கண்டிப்பாக இந்த நான்கு பிரமாண்ட படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்றும், பாக்ஸ் ஆபிசில் ஒவ்வொரு படத்திற்கும் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த தகவல் தற்போது வரை வெளியான செய்தி என்பதும், வரக்கூடிய நாட்களில் இது மாறலாம், அல்லது இன்னும் சில படங்கள் கூட இந்த வரிசையில் இணையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.