சுமோ திரைவிமர்சனம்
வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் சிவா நடிப்பில் எஸ்.பி. ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள சுமோ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ளது. படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
விடிவி கணேஷ் Restaurant-ல் வேலை பார்த்து வரும் கதாநாயகன் சிவா, கடலில் Surfing செய்வதை தொழிலாக கொண்டுள்ளார். ஒருநாள் கடலுக்கு Surfing செய்யப்போகும் சிவா, எதேச்சையாக கடலோரம் அலைகளில் அடித்துவரப்பட்ட Yoshinori Tashiro-வை பார்க்கிறார்.
அவர் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். கண் விழிக்கும் Yoshinori Tashiro, தனது உயிரை காப்பாற்றிய சிவாவை ஒரு கடவுளாக பார்க்கிறார். சிவாவை விட்டு எந்நேரமும் பிரியாமல் இருக்கிறார். ஒரு குழந்தை போலவே நடந்துகொள்கிறார்.
ஒரு கட்டத்தில், இவன் ஒரு சுமோ வீரர் என கண்டுபிடிக்கும் சிவா, இவனை மீண்டும் ஜப்பானுக்கு அனுப்பவேண்டும் என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இதன்பின் என்ன நடந்தது? இறுதியாக Yoshinori Tashiro சுமோ போட்டியில் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் எடுத்துக்கொண்ட கதைக்களம் சிறப்பான ஒன்றாக இருந்தாலும், அதை திரைக்கதையில் வடிவமைத்த விதம் மோசமாக இருந்தது. ஒரு இடத்தில் கூட சுவாரஸ்யம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் பெரிதாக நன்றாக இல்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரம் சுமோ வீரர் Yoshinori Tashiro தான். அந்த கதாபாத்திரத்தையாவது ரசிக்கும்படி வடிவமைத்தார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை.
ஹீரோ சிவா, ஹீரோயின் பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் கதாபாத்திரங்கள் சலிப்பை ஏற்படுத்துகிறது. தேவையே இல்லாமல் இதில் யோகி பாபு எதற்கு என்கிற கேள்வியும் எழுகிறது. மேலும், சதீஸ் கேமியோ வேறு.
நகைச்சுவையாவது ஒர்கவுட் ஆகும் என எதிர்பார்த்தால், அதுவும் சொதப்பல். மேலும் இப்படத்தை எடிட்டர் பிரவீன் கே.எல் தான் எடிட் செய்தாரா என்கிற கேள்வியும் வருகிறது. மிகவும் மோசமான எடிட்டிங். டெக்னீகளாகவும் படம் பலமாக இல்லை.
இறுதியாக படத்தை பார்த்து முடிக்கும்போது, அட போங்கடா நீங்களும் உங்க படமும் என்பது போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது. படத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் அது, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மட்டும் தான்.
பிளஸ் பாயிண்ட்
நிவாஸ் கே. பிரசன்னா
கதைக்களம்
மைனஸ் பாயிண்ட்
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு
சலிப்பை ஏற்படுத்தும் காட்சிகள்
எடிட்டிங்