மீடியாவில் இருந்து விலகிய சன்நியூஸ் மோனிகாவை நியாபகம் உள்ளதா?- இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
சன்நியூஸ் மோனிகா
சன் தொலைக்காட்சி தான் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் விரும்பும் நம்பர் 1 தொலைக்காட்சியாக இருந்தது. எனவே நடிப்பு, தொகுப்பாளர்க வேலை என என்ன செய்ய நினைத்தாலும் அந்த டிவியில் பணிபுரிய தான் முதலில் ஆசைப்படுவார்கள்.
அப்படி அந்த தொலைக்காட்சியில் வானிலை செய்தி வாசிப்பாளராக இருந்து கலக்கியவர் மோனிகா. பின் சமூக வலைதள பக்கம் வந்தவுடன் அவரது டிராக் மாற சீரியல், சினிமா பக்கம் அவர் வருவதில்லை.
மாறாக சமூக பிரச்சனை, அரசியல் போன்ற விஷயங்களை தைரியமாக பேசி வீடியோக்கள் வெளியிட தொடங்கினார்.
அப்படி அவர் சில அரசியல் விஷயங்கள் குறித்து பேசியதால் தனது மகனை வைத்து மிரட்டல்விடும் அளவிற்கு சில விஷயங்கள் நடக்க இப்போது அரசியல் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலை
என்னுடைய கணவர் ஒரு முக்கியமான பணியில் இறங்கி இருக்கிறார். அவருக்கு உதவலாம் என்று நினைத்து தான் சீரியல், சினிமா பக்கம் என்னால் நடிக்க முடியாமல் போனது. என்னுடைய கணவர் அரசியல் தொடர்பான வேலையை செய்து கொண்டு வருகின்றார்.
பிரசாந்த் கிஷோர் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் பண்ற பொலிடிகல் பிராண்டிங் ஃபீல்டுலில் தான் என்னுடைய கணவரும் இருக்கிறார். ஒரு மனைவியா அவரது வேலைக்கு உதவிகளைச் செய்ய முடிவு செய்திருக்கிறேன் என அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
பழம்பெரும் நடிகை KR விஜயாவின் மகள் மற்றும் பேரனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை வெளிவராத போட்டோ

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
